கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை வெளியீடு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை வெளியிடுவதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 11-ந் தேதி நிறைவடைந்தது. இதில் மாநிலம் முழுவதும் 8½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தேர்வு முடிவு 19-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை வெளியாகிறது. பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் இந்த தேர்வு முடிவை மல்லேசுவரத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை தேர்வு வாரிய அலுவலகத்தில் வெளியிடுகிறார்.
மதியம் 1 மணிக்கு பிறகு தேர்வு முடிவுகளை https://karresults.nic.in/ என்ற இணையதள முகவரி மூலம் பார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளிலும் இன்றே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அவர்களின் தேர்வு முடிவு குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story