நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை


நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை
x
நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை
தினத்தந்தி 18 May 2022 8:48 PM IST (Updated: 18 May 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை

கோவை
மோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 96 லட்சம் அபராதமும் விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நிதி நிறுவனம்

சேலம் மாவட்டம் மல்லூரில் பாவைஅம்மன் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தனர். ரூ.5 கோடி வசூலித்துவிட்டு முதலீடு செய்தவர்களுக்கு வட்டி மற்றும் அசலை திருப்பி தராமல் இந்த நிறுவனத்தினர் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் மாணிக்கம் (வயது60), மேலாளர் முருகேசன் (62), ஊழியர் சாந்தி (58) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் உரிமையாளர் மாணிக்கம் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

10 ஆண்டு சிறை

மேலாளர் முருகேசன், ஊழியர் சாந்தி ஆகியோர் மீதான வழக்கு விசாரணை கோவை டேன்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ரவி, குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 96 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ஊழியர் சாந்தி விடுதலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துவிஜயன் ஆஜராகி வாதாடினார்.

Next Story