புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 May 2022 9:51 PM IST (Updated: 18 May 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா?
மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி வழியாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -தனிஷ், மெதுகும்மல்.
நடவடிக்கை தேவை
திற்பரப்பு அருவியின் எதிர்புறம் சுற்றுலா பயணிகளின் பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கு பொருட்கள்  பாதுகாக்க ரூ.30 கட்டணம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.50, ரூ.100 என விருப்பம் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் மனவருத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, முறையான கட்டணம் வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                                     -சியாமளா, செருப்பாலூர்.
குரங்கு தொல்லை
நாகர்கோவில் மேலராமன்புதூரில் சிவன்கோவில் எதிரே தெரு ஒன்று உள்ளது. இந்த தெருவில் கடந்த 2 வாரங்களாக ஒரு குரங்கு சுற்றித்திரிகின்றது. அந்த குரங்கு வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை அள்ளிச் செல்வதும், விரட்டினால் கடிக்க முயற்சித்தும் வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குரங்கை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -சிவகணேசன், மேலராமன்புதூர்.
விபத்து அபாயம்
தக்கலை மேட்டுக்கடையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் சாலையோரம் தோண்டப்பட்ட ஓடை பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
சேதமடைந்த சாலை
பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் பொற்றவிளை ஆழாங்குளம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை  சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -எம்.தேவதாஸ், பொற்றவிளை.
இணையதள சேவை தேவை
குமரி மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் ஒன்றாக விளங்கும் பேச்சிப்பாறையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு பள்ளி, தபால் நிலையம் ஆகியவை உள்ளது. இங்கு ‘4 ஜி’ இணைய சேவை கிடைப்பது இல்லை. இதனால், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இணையதள சேைவ கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -சா.சதன் சாபு, பேச்சிப்பாறை.

Next Story