தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 4:48 PM GMT (Updated: 18 May 2022 4:48 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி வரவேற்றார். தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர் நாகன், கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், கெலமங்கலம் பேரூர் பொறுப்பாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சார்கள் கலைமணி பாரதி, பெரம்பலூர் விஜயரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன், வர்த்தக அணி சின்னராஜ், தொ.மு.ச. மாவட்ட அணி கோபாலகிருஷ்ணன், விவசாய அணி ஸ்ரீதர், மாணவரணி ராஜா, பேரூர் அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர்கள் சக்திவேல், நஞ்சப்பன், பொருளாளர் அப்துல்கலாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story