கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1,033 கனஅடியாக அதிகரிப்பு-ரசாயன நுரை சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1,033 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஓசூர்:
தென்பெண்ணை ஆற்றின் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஓசூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் நீரை ரசாயன நுரைகள் சூழ்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நுரைகள் காற்றில் பறந்து ஆங்காங்கே படர்ந்துள்ளன. ஒரு வாரத்துக்கும் மேலாக ரசாயன நுரைகள் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story