மந்திராலயாவில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி- மதியம் 2 மணிக்கு மேல் செல்லலாம்
கொரோனா தொற்று குறைந்ததால் மந்திராலயாவில் அலுவலக வார நாட்களில் மதியம் 2 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை,
கொரோனா தொற்று குறைந்ததால் மந்திராலயாவில் அலுவலக வார நாட்களில் மதியம் 2 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மீண்டும் அனுமதி
மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவில் கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களுக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது பற்றி மந்திராலயா சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதியம் 2 மணிக்கு மேல்..
கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இனி மந்திராலயாவில் அலுவலக வார நாட்களில் தினசரி மதியம் 2 மணிக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முதல் முறையாக மந்திராலயாவிற்கு சென்றார்.
அப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காகிதமில்லா நிர்வாகத்தில் கவனம் செலுத்துமாறு மந்திராலயா அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story