‘மோடியை எதிர்ப்பவர்களின் குழு புகைப்படம்’: அகிலேஷ்-மாயாவதி கூட்டணி மீது அமர்சிங் தாக்கு


‘மோடியை எதிர்ப்பவர்களின் குழு புகைப்படம்’: அகிலேஷ்-மாயாவதி கூட்டணி மீது அமர்சிங் தாக்கு
x
தினத்தந்தி 31 March 2019 9:06 PM GMT (Updated: 2019-04-01T02:38:00+05:30)

மோடியை எதிர்ப்பவர்களின் குழு புகைப்படம் என அகிலேஷ்-மாயாவதி கூட்டணியை அமர்சிங் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியை சமாஜ்வாடியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அமர்சிங் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி கூட்டணியில் உள்ள கட்சிகள் மோடியை பார்த்து அஞ்சுகின்றன. எனவே பழைய இந்தி திரைப்பட பாடல் ஒன்றில் வரும் ‘நாம் ஒன்றாக கரம் கோர்ப்போம்’ என்ற வரியை போல அவர்கள் இணைந்து இருக்கின்றனர். மோடியை எதிர்ப்பவர்களின் குழு புகைப்படம் போல இந்த கூட்டணி உள்ளது’ என்றார்.

இந்த கூட்டணி உத்தரபிரதேசத்தில் மொத்தமுள் 80 தொகுதிகளில் வெறும் 7 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று கூறிய அமர்சிங், சமாஜ்வாடி கட்சி தற்போது பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். முலாயம் சிங் யாதவ், சிவபால் யாதவை போல தற்போதைய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு திறமை இல்லை எனவும் அவர் கூறினார்.


Next Story