உ.பி.யில் கொடூரம்: திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய கர்ப்பிணி பெண்னை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
உத்தரப்பிரதேசத்தி திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய கர்ப்பிணி பெண்னை கழுத்தை அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைதுசெய்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அபுநகர் என்ற பகுதியில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து, கொலை செய்தது பெண்ணின் காதலன் என்று கைது போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குப்தா, 20 வயது பெண்ணுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி வந்துள்ளனர். ராகுல் குப்தாவால், அப்பெண் கர்ப்பமானார்.
ராகுல் குப்தாவின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இதனால், அப்பெண்ணிடம் கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அப்பெண்ணோ, தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும், என்றும், இல்லையென்றால், போலீசில் புகார் அளிப்பேன் என்றும் ராகுல் குப்தாவை மிரட்டியுள்ளார்.
இதனால், கர்ப்பிணிப்பெண்ணை கொல்ல நினைத்த ராகுல் குப்தா, அப்பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கூர்மையான பொருளால் அவரது கழுத்தை அறுத்து கொன்றார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்ட தகவலின்படி, அவருக்கும் குப்தாவுக்கும் கடந்த ஒரு வருடமாக தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுல் குப்தாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.