வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை?


வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை?
x

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.

அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். இந்நிலையில் வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அனைத்து வங்கிகளுக்கும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏதும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.


Next Story