Normal
டெல்லியில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

image credit: ndtv.com
மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் கட்டுமானப் பணியின் போது வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
புதுடெல்லி,
மேற்கு டெல்லியின் முண்ட்கா பகுதியில் வீடு கட்டுமானப் பணியின் போது வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாலை 5.24 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதனை தொடர்ந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய 3 தொழிலாளர்களும் தீயணைப்புப்படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 24 வயது தொழிலாளி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






