பாகிஸ்தான் எல்லையில் 1½ கிலோ போதைப்பொருள் சிக்கியது


பாகிஸ்தான் எல்லையில் 1½ கிலோ போதைப்பொருள் சிக்கியது
x

கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் 1½ கிலோ போதைப்பொருள் சிக்கியது.

சண்டிகா்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் போதைப்பொருள் கடத்த இருப்பதாக தகவல் கசிந்தது. அதன்பேரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சோதனை நடத்தினர்.

அங்குள்ள வயல்வெளியில் சந்தேகத்தை ஏற்படும்படியான ஒரு பார்சல் அவர்கள் கண்களில் சிக்கியது. அதனை பிரித்து பார்த்தபோது ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. 1½ கிலோ எடைக்கொண்ட ஹெராயினை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story