ஒடிசாவில் காட்டுப்பன்றிகள் தாக்கியதில் ஒருவர் பலி, 6 பேர் காயம்


ஒடிசாவில் காட்டுப்பன்றிகள் தாக்கியதில் ஒருவர் பலி, 6 பேர் காயம்
x

கோப்புப்படம்

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று காட்டுப்பன்றிகள் தாக்கியதில் 62 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பெர்ஹாம்பூர்,

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று காட்டுப்பன்றிகள் தாக்கியதில் 62 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். பொலசரா வனப்பகுதியில் உள்ள கோடாலா அருகே உள்ள ராமபள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராமபள்ளி, பேருபாடி மற்றும் மருதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் அவர்களை தாக்கியதாக குமுசர் தெற்கு கோட்ட வன அலுவலர் திலீப் குமார் ரவுத் தெரிவித்தார்.

கோடாலா சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த பாரதி ஸ்வைன் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் 30 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வன அலுவலர் தெரிவித்தார்.


Next Story