ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை
x

image credit: ndtv.com

ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி என்கவுன்ட்டரில் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரின் துலிபால் பகுதியில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில், பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்ட்டரில் உயிரிழந்தவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story