"10% இட ஒதுக்கீடு - அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும்" கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
நடப்பாண்டு முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி கூட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசர் சவுந்தரராஜன் கூறியதாவது;
"புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி மக்கள் சார்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நனவாகும். இதற்காக பணியாற்றிய முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.