ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை..! போலீசார் விசாரணை


ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை..! போலீசார் விசாரணை
x

image credit: ndtv.com

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் உள்ள சைத்பூர் கிராமத்தில் ப்ரணே குமார் என்ற 10 வயது சிறுவன், டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதையடுத்து நீண்ட தேடுதலுக்கு பிறகு நள்ளிரவில் சிறுவன் உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கதுவாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆர்.சி.கோட்வால் கூறுகையில், சிறுவனை டேப்பால் வாயை மூடி, கைகால்களை கட்டிய நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தன. மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என்று அதிகாரி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக கூறிய அவர், இந்த குற்றம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story