உத்திர பிரதேசம்: தனது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை வெளியிட்ட யோகி ஆதித்யநாத்
தனது 2-வது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை உத்திர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டார்
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்-மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
Related Tags :
Next Story