புதிதாக 106 பேருக்கு கொரோனா: சத்தீஷ்காரில் ஒருவர் பலி
நாட்டில் நேற்று புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
புதுடெல்லி,
நாட்டில் நேற்று முன்தினம் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை குறைந்தது. புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 186 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 226 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.
தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 81 குறைந்துள்ளது. இதனால் தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,067 ஆகக் குறைந்தது
தொற்றினால் நேற்று முன்தினம் ஒருவர் கூட பலியாகவில்லை. நேற்று சத்தீஷ்காரில் மட்டும் ஒருவர் பலியானார். இதனால் தொற்றால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.