10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-17T00:16:44+05:30)

கொப்பா அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகே குட்டேதோட்டா பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபாகர்(வயது 22) என்பவர் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபோன்று அடிக்கடி பிரபாகர், மாணவி தனியாக இருக்கும்போது வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். ஆனால் மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், ஜெயப்புரா போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரபாகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story