பால் பாக்கெட் வாங்க சென்ற சிறுமி காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
11 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கங்காநகர் பகுதியை சேர்ந்த பெண் தனது 11 வயது மகளை நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்க அனுப்பியுள்ளார்.
கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்த சிறுமையை ஒரு நபர் காரில் கடத்தி சென்றார்.
அந்த நபர் சிறுமியை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் வீட்டின் அருகே உள்ள சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
மயக்கமடைந்த சிலையில் சாலையோரம் சிறுமி கிடந்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தாயார் சிறுமியை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தாய் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.