பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.12 கோடி கொகைன் பறிமுதல்; கென்ய பெண் கைது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.12 கோடி கொகைன் பறிமுதல்; கென்ய பெண் கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.12 கோடி மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கென்யாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் எத்தியோபியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உள்ளாடைக்குள் போதைப்பொருள் இருந்த குப்பிகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கென்யாவை சேர்ந்த அஜெங்க் ஓ கரோலின் அகோலா என்பதும், அவர் எத்தியோபியாவில் இருந்து கொகைன் எனப்படும் போதைப்பொருளை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.12 ேகாடி மதிப்பிலான கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து விமான நிலைய போலீசார் கென்யா பெண்ணை கைது செய்தனர். ேமலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story