குஜராத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்


குஜராத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x

குஜராத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கன்டெய்னரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக மாநில வருவாய் புலனாய்வுதுறை இயக்குனரகத்தின் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதோடு ஆமதாபத்தில் உள்ள கன்டெய்னர் குடோனில் செம்மரக்கட்டைகளுடன் கூடிய கன்டெய்னர் இருப்பதும் தெரியவந்தது.

அதன்பேரில் வருவாய் புலனாய்வுதுறை இயக்குனரக அதிகாரிகள் கன்டெய்னர் குடோனுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட கன்டெய்னரில் செம்மரக்கட்டைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதைத்தொடர்ந்து, அந்த கன்டெய்னரில் இருந்து ரூ.11.70 கோடி மதிப்புடைய 14.63 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story