ஒடிசா ரெயில் விபத்தில் 120 பேர் உயிரிழப்பு - 800 பேர் காயம் என தகவல்


ஒடிசா ரெயில் விபத்தில் 120 பேர் உயிரிழப்பு - 800 பேர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2023 2:30 AM IST (Updated: 3 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என ஒடிசா தீயணைப்புத்துறை தலைவர் சுதான்ஷூ சாரங்கி தகவல் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

18க்கும் மேற்பட்ட ரெயில்பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் நீடிக்கிறது.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான ரெயில்களில் பயணம் செய்த தமிழக பயண்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக ரெயில்வே டிஜிபி தலைமையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.


Next Story