நொய்டாவில் 14 சீனர்கள் கைது


நொய்டாவில் 14 சீனர்கள் கைது
x

கோப்புப்படம்

நொய்டாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 14 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

நொய்டா,

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் உள்பட 14 சீனர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களது விசா கடந்த 2020-ம் ஆண்டே காலாவதியாகி விட்டது.

எனினும் தொடர்ந்து அவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்தனர். இதை கண்டறிந்த உளவுத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நொய்டா போலீசார் நேற்று அவர்கள் 14 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக கிரேட்டர் நொய்டாவில் தங்கியிருந்த சீனர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story