அசாம்: பேருந்தில் கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல்- இருவர் கைது


அசாம்: பேருந்தில் கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல்- இருவர் கைது
x

image tweeted by @ANI

அசாம் மாநிலத்தில் பேருந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்பி அங்லாங்,

அசாம் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) இனைந்து நேற்று இரவு கர்பி அங்லாங் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தில் இருந்து 2.323 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள லஹரிஜான் பகுதியில், போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்ர் இணைந்து சோதனை நடத்தினர்.

அப்போது மணிப்பூரில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து 2.323 கிலோ எடையுள்ள 14 தங்கக் கட்டிகளை மீட்டனர். இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீஸ் அதிகாரிகள், தங்கக்கட்டிகளை கொண்டுவந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story