பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி - ஏராளமானோருக்கு சிகிச்சை


பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி - ஏராளமானோருக்கு சிகிச்சை
x

கோப்புப்படம்

பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகாரின் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபூர், முஷார் தோலி உள்ளிட்ட கிராமங்களில் 24 மணி நேரத்தில் 14 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் அடுத்தடுத்து இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

மேலும் ஏராளமா னோர் மேற்படி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ சாராயமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படையினர் மேற்படி கிராமத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.

இதைப்போல கலால் துறை அதிகாரி தலைமையில் குழு ஒன்று மேற்படி கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே இந்த விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story