உத்தரபிரதேசம்: மின்னல் தாக்கி 14 பேர் பலி


உத்தரபிரதேசம்: மின்னல் தாக்கி 14 பேர் பலி
x

Image Courtesy: PTI

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி நேற்று ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று கடுமையான இடியுடன் மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

பதேபூர், பண்டா, பல்ராம்பூர், சந்துலி, ரேபரெலி, அமேதி, கவுஷம்பி, சுல்தான்பூர், சித்திரகோட் ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்னல் தாக்குதலில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


Next Story