மியான்மர் வழியாக கடத்தி வரப்பட்ட 140 வெளிநாட்டு விலங்குகள் - மிசோரம் மாநிலத்தில் மீட்பு


மியான்மர் வழியாக கடத்தி வரப்பட்ட 140 வெளிநாட்டு விலங்குகள் - மிசோரம் மாநிலத்தில் மீட்பு
x

வெளிநாட்டில் இருந்து இந்தியா-மியான்மர் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட 140 விலங்குகளை மிசோரம் போலீசார் மீட்டுள்ளனர்.

எய்சால்,

மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லை வழியாக 3 எஸ்.யூ.வி. வாகனங்களில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு விலங்குகளை மிசோரம் மாநில காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். முன்னதாக இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கடத்தல் சம்பவத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறு மீட்கப்பட்ட விலங்களில் 30 ஆமைகள், 2 மர்மோசெட் குரங்குகள், 22 மலைப்பாம்புகள், 55 முதலைக் குட்டிகள், பூனைகள், உடும்புகள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளிட்ட விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தமாக 140 விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story