நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - 3 பேர் கைது


நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - 3 பேர் கைது
x

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகனாபாத்,

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ஜெகனாபாத் ஏஎஸ்பி ஹரிவன்ஷ் குமார் கூறும்போது, "நிலத் தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பெண் ஒருவர், தனது ஒன்றரை வயது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சண்டையின்போது, குழந்தை தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

எதிர்தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக உயிரிழந்த குழந்தையின் தந்தை சினி லால் குமார் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரின் அடையாளத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story