ஒடிசா ரெயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 19 பேரை காணவில்லை

ஒடிசா ரெயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 19 பேரை காணவில்லை
x

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந் தேதி நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.

பாட்னா,

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந் தேதி நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.

அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 50 பேர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது. 43 பேர் காயமடைந்தனர். 19 பேரை இன்னும் காணவில்லை என்றும் கூறியது. அவர்கள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்கள் ஆவர்.

பீகாரை சேர்ந்த 12 பேரிடம் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றை அடையாளம் தெரியாத உடல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடந்து வருகிறது.

உயிர் தப்பிய 88 பேர் இதுவரை பீகாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Next Story