ராஜஸ்தானில் 19 வயது பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை


ராஜஸ்தானில் 19 வயது பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை
x

கோப்புப்படம் 

ராஜஸ்தானில் 19 வயது பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் 19 வயது பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசா தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் நடந்ததாகவும், மாலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எஃப்.ஐ.ஆர் படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான நபர் ஒருவரால், அப்பெண் நரேஷ் ஜாட் மற்றும் இரண்டு பேரால் கடத்தப்பட்டார். பின்னர் அப்பெண்ணை அவர்கள் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறிய போலீசார் குற்றத்தில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வருவதாக தெரிவித்தனர்.


Next Story