பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 191 ரெயில் சேவைகள் ரத்து - இந்திய ரெயில்வே
பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 191 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்களில் பராமரிப்பு பணி மற்றும் ரெயில்களின் செயல்பாடு தொடர்பாக வேலைகள் நடைபெற இருப்பதால் நாடு முழுவதும் 191 ரெயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று இயங்க வேண்டிய 156 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 35 ரெயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில்களில் லக்னோ, கான்பூர், டெல்லி போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களும் அடங்கும்
Related Tags :
Next Story