சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் சிறையில் கொலை


சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் சிறையில் கொலை
x

கைதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சண்டிகர்,

பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா என்று அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த வருடம் மே 29 அன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது கொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சண்டையில் கைதி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story