கர்நாடகத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.37 லட்சம் கொள்ளை


கர்நாடகத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.37 லட்சம் கொள்ளை
x

2 ஏ.டி.எம். எந்திரங்களிலும் ஒரே மாதிரியான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தின் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் தொட்டப்பேட்டை பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைத்து உள்ளே இருந்த ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதேபோல், கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலைய ரோடு போவி காலனி அருகே உள்ள ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ.17 லட்சத்தை அள்ளிச் சென்றுவிட்டனர்.

இந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களிலும் ஒரே மாதிரியான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் 2 குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story