தெலுங்கானாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் இருந்து விசாகப்பட்டினம் வந்தபோது கார் விபத்தில் சிக்கி உள்ளது.
ஐதாராபாத்,
தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 2 கார்களில் இருந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்குள்ளான காா் ஒன்று கர்நாடகத்தில் இருந்து ஐதராபாத் சென்றதாகும். மற்றொரு கார் ஒடிசாவில் இருந்து விசாகப்பட்டினம் வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளது.
Related Tags :
Next Story