பெங்களூருவில், ஆன்லைனில் விற்பனை: ரூ.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் - 5 பேர் அதிரடி கைது


பெங்களூருவில், ஆன்லைனில் விற்பனை: ரூ.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் - 5 பேர் அதிரடி கைது
x

பெங்களூருவில், ஆன்லைனில் விற்ற ரூ.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் வீடுகளுக்கு கூரியர் உள்பட பல்வேறு வழிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக பெங்களூருவை சேர்ந்த விஷால் குமார், பிமன்சு தாகூர், சாகர், மகாபலிசிங், சுபர்ஜித் சிங் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் வேலை தேடும் வாலிபர்கள் மூலம் வீடுகளுக்கு பரிசு பொருட்கள், தபால், உணவு, கூரியர் டெலிவரி செய்வதுபோல், போதைப்போருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதற்காக அவர்கள் சமூக வலைத்தளங்களில் குழு அமைத்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்கு வேண்டிய போதைப்பொருட்களை அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story