அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் - இந்திய வானிலை மையம் தகவல்


அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் - இந்திய வானிலை மையம் தகவல்
x

கோப்புப்படம்

அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் தென்கிழக்கிலும், குறைந்த வெப்பமண்டல மட்டங்களின் சுற்றுப்புறங்களிலும் சுழற்சி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் சுழற்சி உள்ளது. இது நடுத்தர வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு அந்தமான்-நிக்கோபார் தீவுகள், அதைப்போல கேரளா, கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 10 டிகிரி வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது. கிழக்கு ராஜஸ்தானில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் அலைகள் நிலவும் எனவும் ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

டெல்லியில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரியாக பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 3 புள்ளிகள் குறைவு ஆகும். அதேநேரத்தில் காற்றின் தரம் மோசமான பிரிவில் பதிவாகி மக்களுக்கு பல தொல்லைகளை உருவாக்கியுள்ளது.


Next Story