பைந்தூரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு


பைந்தூரில்  நடுக்கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

பைந்தூரில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.

மங்களூரு-

பைந்தூரில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.

கடலில் மீன் பிடிக்க...

உடுப்பி மாவட்டம் புத்தூர் தாலுகா குரிஹத்லு பகுதியை சேர்ந்தவர் மிருத்தஞ்சன் (வயது22). இவர் தனது விசைப்படகில் சிரூர் அருகே உள்ள அலிவேகம் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றார். அவருடன் கங்கொல்லியை சேர்ந்த முசாப்(22), நசன்(24) உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது அவர்கள் நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென்று ராட்சத அலை ஏற்பட்டது. இதில் சிக்கி விசைப்படகு நடுக்கடலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு சென்றனர். அவர்களில் மிருதஞ்சன் மற்றும் மற்றொருவர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். முசாப், நசன் நீச்சல் அடிக்கும் போது உடல் சோர்வு ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து கரைக்கு நீச்சல் அடித்து வந்த மீனவர்கள், இதுபற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து வந்து, உயிரிழந்த முசாப், நசன் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நீச்சல் அடித்து வந்த மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பைந்தூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story