இருசக்கர வாகனங்களை திருடி விற்ற 2 பேர் கைது


இருசக்கர வாகனங்களை திருடி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-21T00:16:29+05:30)

பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு புட்டேனஹள்ளி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகனங்களை திருடி விற்றதாக 2 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர்கள் ராஜ்குமார், மகேந்திரா ஆகும். இவர்கள் 2 பேரும் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடுவார்கள். பின்னர் அந்த வாகனங்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்து உள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 32 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். கைதான 2 பேர் மீதும் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story