சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை


சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2023 6:47 AM IST (Updated: 1 Aug 2023 10:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சென்னை,

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்ட்டர் தாக்குதல் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்போது, ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story