ஒடிசாவில் 2 லாரிகள் மோதி விபத்து - 3 டிரைவர்கள் உயிரிழப்பு


ஒடிசாவில் 2 லாரிகள் மோதி விபத்து - 3 டிரைவர்கள் உயிரிழப்பு
x

லாரிகள் உருக்குலைந்து தீப்பிடித்து எரிந்ததில் 3 டிரைவர்கள் உயிரிழந்தனர்.

புவனேசுவர்,

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிலைதடுமாறியது.

அதன் பின்னே வந்த 2 லாரிகள் அதன் மீது மோதி விபத்தில் சிக்கின. அதில் லாரிகள் உருக்குலைந்து தீப்பிடித்து எரிந்தன. இதில் 3 டிரைவர்கள் லாரிகளுக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story