டெல்லி-ஜெய்ப்பூர் சாலையை முற்றுகையிட்ட 200 பேர்.. போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு


டெல்லி-ஜெய்ப்பூர் சாலையை முற்றுகையிட்ட 200 பேர்.. போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு
x

ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி 200- க்கும் மேற்பட்டோர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி 200- க்கும் மேற்பட்டோர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.

கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் திரண்டு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.

இதனை தடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, சிலர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்க துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story