தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பு

x
தினத்தந்தி 15 Dec 2016 2:49 PM GMT (Updated: 2016-12-15T20:19:34+05:30)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும். 7 சதவீத உயர்வால் தற்போது உள்ள 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக அகவிலைப்படி உயரும்.

சென்னை,

இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும். ஜூலை 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் அறிவிப்பால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவில்லைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு 1,833 கோடியே 33 லட்சம் தேராயமாக இருக்கும் என்று முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Next Story