காஷ்மீரில் ரொக்கமற்ற பரிமாற்றத்துக்கு மாறிய முதல் கிராமம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க மக்கள் ரொக்கமற்ற வரவு–செலவுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த ரொக்கமற்ற பண பரிமாற்ற
ஸ்ரீநகர்
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க மக்கள் ரொக்கமற்ற வரவு–செலவுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த ரொக்கமற்ற பண பரிமாற்றத்துக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் லணுரா என்ற கிராமம் முற்றிலுமாக ரொக்கமற்ற வரவு–செலவு முறைக்கு மாறி உள்ளது.
பட்காம் என்ற மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் மின்னணு பணம் செலுத்தும் முறையை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி தற்போது அந்த கிராமத்தில் சுமார் 150 பேருக்கு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் ரொக்கமற்ற பண பரிமாற்றத்துக்கு மாறி உள்ள முதல் கிராமம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.