நோட்டுகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது-அருண் ஜெட்லி


நோட்டுகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது-அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 20 Dec 2016 9:14 AM GMT (Updated: 20 Dec 2016 9:14 AM GMT)

சென்னை, நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ந்தேதி தடை விதித்தது. வங்கிகளின் முன்னால் அன்று முதல் பணத்தட்டுப் பாட்டால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். வங்கி களின் முன்பும், ஏ.டி.எம்.களிலும் வரிசையில் காத் திருக்கிறார்கள்.

சென்னை,

நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ந்தேதி தடை விதித்தது.
வங்கிகளின் முன்னால்

அன்று முதல் பணத்தட்டுப் பாட்டால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். வங்கி களின் முன்பும், ஏ.டி.எம்.களிலும் வரிசையில் காத் திருக்கிறார்கள். தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குள் படாதபாடு பட்ட பொது மக்கள் தற்போது அன்றாடச் செலவுகளுக்கே பணமின்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொழில் அதிபர்கள் பலரிடம் குவிந்து கிடக்கும் நிலையில், ஏழை, நடுத்தர மக்கள் 2 ஆயிரம் ரூபாய் ஒரு நோட்டை எடுப்பதற்கே கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகரம் முழுவதிலும் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கின்றன. அனைத்து இடங்களிலும் குறிப்பிட்ட சில ஏ.டி.எம். மையங்களோ அல்லது ஏதா வது ஒரு ஏ.டி.எம் மையமோ மட்டுமே திறந்திருக்கிறது. இதனால் அங்கு பணம் எடுப்பதற்காக மக்கள் அதிகாலையிலேயே எழுந்து திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களை நோக்கி படை யெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

500, 1000 ரூபாய் நோட்டு களுக்கு தடைவிகிக்கப்பட்ட நாளில் இருந்தே பணப்பிரச் சினையை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் ரூபாய் நோட்டு பிரச்சினை மட்டும் 42 நாளாகியும் இன்னும் தீராம லேயே இருந்து வருகிறது. ரூபாய் நோட்டு பிரச்சினை சில வாரங்களிலேயே சரியாகி விடும் என்று மத்திய அரசு இதுவரை பலமுறை கூறிவிட்டது. ஆனால் 7 வாரங்களை கடந்த பின்னரும், பணப்பிரச்சினை தீராமல், பொது மக்களுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் மாதச் சம்பளம் பெறுபவர்கள், சம்பள பணத்தை எடுப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். 20-ந்தேதியை தாண்டிய பின்னரும் பலர் முழுமையாக சம்பள பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள்ளாவது ரூபாய் நோட்டு பிரச்சினை தீர்ந்து இயல்பு நிலை திரும்புமா? என்கிற எதிர் பார்ப்பு அனைத்து தரப்பின ருமிடையே நிலவுகிறது.

இது குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

 இந்திய ரிசர்வ் வங்கியில்  டிசம்பர்-30க்கு பிறகு போதுமான புதிய நோட்டுகள் கையிருப்பில் உள்ளது.  ரிசர்வ் வங்கியிலிருந்து நாள்தோறும் மற்ற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது.பழைய நோட்டுகளை மொத்தமாக டெபாசிட் செய்யாமல் சிறிய தொகைகளாக செலுத்துவது அரசுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.பணம் மாற்றும் முறைகேட்டில் சிக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்


Next Story