எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார்


எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார்
x
தினத்தந்தி 25 Dec 2016 9:33 PM GMT (Updated: 2016-12-26T03:03:25+05:30)

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஆரம்பம் முதலே மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் ந

கொல்கத்தா,

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஆரம்பம் முதலே மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் நடந்த பல்வேறு போராட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வகுப்பது தொடர்பாக டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ‘டெல்லி செல்லும் முதல்–மந்திரி மம்தாபானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்’ என்றார்.


Next Story