டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமனம்


டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமனம்
x
தினத்தந்தி 28 Dec 2016 8:38 PM IST (Updated: 28 Dec 2016 8:38 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்த நஜீப் ஜங்க் ராஜினாமா செய்ததையடுத்து, துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமனம் செய்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மாநிலத்தின் துணை நிலை கவர்னராக கடந்த 2013–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த நஜீப் ஜங், கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

 நஜீப் ஜங்கின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனில் பைஜால்  வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய உள்துறை செயலராக பொறுப்பு வகித்தவர் ஆவார். 1969 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கவர்னராக நியமிக்கப்பட்ட அனில் பைஜாலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story