ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிருப்தி


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து  சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிருப்தி
x
தினத்தந்தி 31 Jan 2017 10:57 AM GMT (Updated: 31 Jan 2017 10:58 AM GMT)

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

புதுடெல்லி

ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக கூபா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வரபட்ட வழிமுறைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக மற்ரும் மத்திய அரசு வக்கீல்கள் விளக்கினர்.தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் சுப்ரீம் கோர்ட்டின் 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு மாறாக உள்ளது. என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.ஜல்லிக்கட்டை எதிர்ப்பது ஏன் என விலங்குகள் நல வாரியத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து  சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா  அதிருப்தி தெரிவித்தார்.வனமுறையை தவிர்க்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பினார். சட்டம்-ஒழுங்கை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்கவேண்டும் எனவும் கூறினார்.

Next Story