பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் 4 அமைச்சர்கள் சந்திப்பு


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் 4 அமைச்சர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 11:20 PM GMT)

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை செங்கோட்டையன் உள்பட 4 அமைச் சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை செங்கோட்டையன் உள்பட 4 அமைச் சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் சந்தித்தனர்

இந்த நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன்(பள்ளி கல்வி), திண்டுக்கல் சீனிவாசன்(வனம்), செல்லூர் ராஜூ(கூட்டுறவு), காமராஜ்(உணவு மற்றும் பொது வினியோகம்) ஆகிய 4 பேரும் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தியும் உடன் இருந்தார்.

மதியம் 1.25 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர்கள் 2.35 மணிக்கு சிறையை விட்டு வெளியே வந்தனர். அமைச்சர்கள் 4 பேரும் சசிகலாவுக்கு தனித்தனியாக பழங்களை வழங்கி நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

கெடுபிடி இல்லை

சிறையில் இருந்து வெளியே வந்த அமைச்சர்களை பத்திரிகையாளர்கள் பேட்டி காண முயற்சி செய்தனர்.

ஆனால் அவர்களின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. சிறை வளாகத்தில் போலீஸ் கெடுபிடி எதுவும் இல்லை. சுமார் 50 போலீசார் சிறை அருகே மெயின் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து சிறைக்கு செல்லும் பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் போலீசார் அனைவரையும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதிக்கிறார்கள். 

Next Story