நடப்பாண்டு பருவமழை 98 சதவீதம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு


நடப்பாண்டு பருவமழை 98 சதவீதம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:13 PM GMT (Updated: 6 Jun 2017 4:13 PM GMT)

நடப்பாண்டு பருவ மழை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

 தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 96 சதவீதம் பெய்யும் என்று அண்மையில் வானிலை ஆய்வும் மையம் வெளியிட்ட நீண்ட கால சராசரி கணிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், ''தென்மேற்கு பருவமழை 98 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சராசரி அளவாகும். 

கடந்த ஏப்ரல் மாதம் கணித்ததை விட 2 சதவீதம் அதிகமாகும். பருவமழைக் காலத்தின் பிற்பாதியில் எல்-நினோ தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால் மழையளவும் சற்று அதிகரிக்கும்'' என்று கணிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பருவ மழை நடப்பாண்டு  சிறப்பாக இருக்கும் என்று  எதிர்பார்க்கிறோம். ஜூலை மாதம் 96 சதவீதமும் ஆகஸ்ட் மாதம் 99 சதவீதம் மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story