ம.பி. விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷடவசமானது மத்திய மந்திரி ராதாமோகன் சிங்


ம.பி. விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷடவசமானது மத்திய மந்திரி ராதாமோகன் சிங்
x
தினத்தந்தி 8 Jun 2017 3:49 PM GMT (Updated: 8 Jun 2017 3:49 PM GMT)

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் கூறியுள்ளார்.

பாட்னா,

யோகா குரு பாபா ராம்தேவ் பீகாரில் உள்ள மோதிஹாரியில் 3 நாள் யோகா முகாம் நடத்தி வருகிறார். இந்த முகாமிற்கு மத்திய விவசாயத்துறை மந்திரி வந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிகவும் துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story